வேறு பெயர்கள் :
1. கண்ணாடி காலம் (வர்ம பீரங்கி-100)
2. குருந்து வர்மம் (சதுரமணி சூத்திரம்)
3. கொழுந்து வர்மம் (படுவர்ம நிதானம்-101)
4. தாங்கக் காலம் (வர்ம கண்டி-உரைநரை)
இருப்பிடம் :
1. ‘சுந்தரமாய் நாசிமத்தி கண்ணாடிகாலம்’ (வர்மகண்ணாடி-500)
2. ‘இடமுடன் சொல் கொம்பேரி காலத்துக்கும்
இருவிரல் மேல் கண்ணாடி காலம் பாரு’ (வ.ஒ.மு. ச.சூ.-1200)
3. ‘தான் என்ற மூக்கு நடுமையம் தன்னில்
தப்பாதே கண்ணாடி காலம் பாரே’ (வாகட நிதானம்)
4. ‘சுழுமுனைக்கு இரண்டு விரலுக்கு மேல் மூக்கு கண்ணாடி
போடுமிடம் கண்ணாடிக்காலம்’ (வர்ம விரலளவு நூல்)
5. ‘நாதனே ஒருவிரல் மேல் சுழிமுனையாம்
முனையான இருவிரல் குருந்துவர்மம்
முக்கியமாய் ஒருவிரல் மேல் பாலக் காலம்’ (சதுரமணி சூத்திரம்)
6. ‘திலர்த காலத்துக்கு இருவிரல் கீழ் தாங்கக்காலம்’ (வர்மகண்டி-உரைநடை)
7. ‘கண்டத்துக்கு மேல் திலர்தகாலத்திலிருந்து சீறுங்கொல்லியுட் படச் சுற்றளவு எடுத்து (32 விரலளவு) பதினாறாய் மடக்கி
(2 விரலளவு) திலர்தகாலத்திலிருந்து கீழ்நோக்கி அளக்க கண்ணாடிக்காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
8. ‘கொள்ளவே (திலர்த வர்மத்துக்கு) பெரு விரலோரிறைக்குத் தாழே
குணமுடனே கொழுந்து வர்மம் கொண்ட பேர்க்கு’
(படுவர்ம நிதானம்-101)
குறிகுணம் :
கண்ணாடிக் காலம் (18)
இயம்பவே கண்ணாடி காலம் கொண்டால்
இதமாக மயங்கிவிடும் இன்னும் கேளு
நயம்பவே தேகமதில் தளர்ச்சை காட்டும்
நல் செவியோடு இருநாசில் ரத்தம் காட்டும்
கயம்பவே கண் அடைக்கும் கடினம் கொள்ளும்
கடிகை ஈரொன்பதுக்குள் கழன்று போகும்
துயம்பவே எண்ணெய் பொத்தி தண்ணீர் விட்டால்
தொலைந்து போம் வர்மமது சுயம்பதாமே. (அடிவர்ம சூட்சம்-500)
காலக்கெடு:
நாழிகை 7(ஒரு நாழிகை 24 நிமிடம்)
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
For more :http://annejesmedon.blogspot.in/2010/11/varma-kalai-and-its-landscape-in.html
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.
Source: Fb wisdom of siddhars

No comments:
Post a Comment