ட்விட்டரில் மொக்கை போடும் வேகத்தை இன்னும் விரைவாக்க சில சுருக்கு வழிகளை இங்கு பகிர்கிறேன்.
நேரக்கோட்டின் (Time Line)
மத்தியிலோ, கீழோ இருக்கும் போது மேலே செல்லவும், புதிப்பிக்கவும் முற்றுப்புள்ளி (Full Stop) ” . “ பயன்படுத்தலாம்.
பக்கத்தின் கீழே செல்ல ” SPACE BAR “ பயன்படுத்தலாம்.
ட்விட்டரில் தேட ” / “ இந்தக் குறியைப் பயன்படுத்தலாம்.
ஒரு ட்விட்டைப் படித்துக்கொண்டிருக்கும் போது, அதை
மீள் ட்வீட் செய்ய ” t “ அழுத்தலாம்
பதிலளிக்க ” r “ அழுத்தலாம்
பிடித்தமானதாகத் தேர்ந்தெடுக்க ” f “ அழுத்தலாம்
அந்த ட்வீட்டின் கூடுதல் தகவல்களைப் பெற ” ENTER “ விசையை அழுத்தலாம்.
நேரக் கோட்டின்
முகப்புப் பக்கத்தை அடைய ” g ” பிறகு ” h “
உங்களுக்கு வந்த பதில்கள் பக்கத்தை அடைய ” g ” பிறகு ” r “
உங்கள் சுயவிவரப் பக்கத்தை அடைய ” g ” பிறகு ” p “
நீங்கள் விரும்பிய ட்வீட்களின் பக்கத்தை அடைய ” g ” பிறகு ” f “
செய்தி அல்லது தகவலை
அனுப்ப ” m”
செய்தி அல்லது தகவல் பக்கத்திற்குச் செல்ல
” g ” பிறகு ” m “
No comments:
Post a Comment